Enter your Email Address to subscribe to our newsletters

வாஷிங்டன் , 05 ஜூலை (ஹி.ச.)
அமெரிக்காவில் நடைபெற்று வரும் 4-வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்–எம்.ஐ. நியூயார்க் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மேத்தியூ டிராம்ப் 44 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 43 ரன்களும் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய எம்.ஐ. நியூயார்க் அணி, தொடக்கத்தில் நிதானமாக ஆடியது. பின்னர் கீரன் பொல்லார்டு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 63 ரன்கள் குவித்தார்.
அவரது பொறுப்பான ஆட்டத்தால், எம்.ஐ. நியூயார்க் அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 168 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது.
இதன் மூலம் எம்.ஐ. நியூயார்க் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் முக்கியமான வெற்றியைப் பதிவு செய்தது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA