வால்பாறை அடுத்த வெள்ளைமலை டாப் டிவிஷன் பகுதியில் சாலையில் மண் சரிவு
கோவை, 05 ஜூலை (ஹி.ச.) கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ஊசிமலை எஸ்டேட் பகுதியில் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அப்பகுதியில் இரண்டு அரசு போக்குவரத்து கழகம் பேருந்து வால்பாறையில் இருந்து கருமலை, ஊசிமலை, வெள்ளமலை டாப் டிவிஷ
Land slides


கோவை, 05 ஜூலை (ஹி.ச.)

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ஊசிமலை எஸ்டேட் பகுதியில் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

அப்பகுதியில் இரண்டு அரசு போக்குவரத்து கழகம் பேருந்து வால்பாறையில் இருந்து கருமலை, ஊசிமலை, வெள்ளமலை டாப் டிவிஷன், மற்றொரு பேருந்து சிறுகுன்ற கஞ்சமலை, வெள்ளமலை, சோலைப்பாடி, வெள்ளமலை டாப் டிவிஷன் ஆகிய சுழற்சி முறையில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் நேற்று பெய்த கன மழையால் சாலையில் மேலும் விரிசல் ஏற்பட்டு கடந்த மூன்று நாட்களாக அவ்வழியே பேருந்து வசதி இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

இதனால் வால்பாறைக்கு வரும் வயதான நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

எனவே அச்சாலையை போர்க்கால அடிப்படையில் விரைவில் சீர் செய்து பொதுமக்களுக்கு சிறப்பான போக்குவரத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN