Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஜூலை (ஹி.ச.)
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ஜூலை 5 உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கரும்புலிகள் நினைவு நாளாகக் கடைப்பிடித்து வீரவணக்கம் செலுத்தும் நாள் என்றும், அதையொட்டி தாமும் மரியாதை செலுத்தியதாகவும் தெரிவித்தார்.
ஈழமே எங்கள் இலக்கு என்ற உறுதியை இந்நாளில் மீண்டும் ஏற்றுக்கொள்கிறோம் என்றார். மேலும், இன்று விசிக விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளதாகவும் கூறினார்.
கூட்டணி தொடர்பான கேள்விக்கு,
கூடி கலந்து பேசியுள்ளோம். ஆனால் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
அதிமுகவை முழுமையாக தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைப்போம் என ஆதவ் அர்ஜுன் கூறியதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
அதிமுகவிடம் கேட்க வேண்டிய கேள்விகளை எங்களிடம் கேட்கிறீர்கள். அதிமுகவை முழுமையாக TVK-வில் இணைப்போம் என்று TVK தரப்பில் பேசினால், அது சரியா? அரசியல் ஜனநாயகமா? என்பதையும் அவர்களிடமே கேட்க வேண்டும் என்றார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான குதிரை பேரம் குற்றச்சாட்டு குறித்து பேசிய அவர், அதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஊழல் புகார் எதிர்நோக்கியவர்கள் TVK-வில் இணைந்தது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு,
அரசியல் களத்தில் இருப்பவன் என்ற முறையில் பதில் சொல்லக் கடமைப்பட்டவன் தான்.
ஆனால் அந்தக் கேள்வியை அதிமுக தலைமையிடமோ அல்லது தவெக தலைமையிடமோ கேட்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam