தொடர் குற்ற வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது - நெல்லை காவல்துறை அதிரடி
நெல்லை, 05 ஜூலை (ஹி.ச.) நெல்லை மாவட்டம் சீதப்பற்பநல்லூர் வல்லவன்கோட்டை காலனியைச் சேர்ந்த 24 வயதான சிவ சுரேஷ் என்பவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய காரணத்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே பல குற்ற வழ
தொடர் குற்ற வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது - நெல்லை காவல்துறை அதிரடி


நெல்லை, 05 ஜூலை (ஹி.ச.)

நெல்லை மாவட்டம் சீதப்பற்பநல்லூர் வல்லவன்கோட்டை காலனியைச் சேர்ந்த 24 வயதான சிவ சுரேஷ் என்பவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய காரணத்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நெல்லை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நெல்லை மாவட்டத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தொடர் குற்றவாளிகள் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை மட்டும் நெல்லை மாவட்டத்தில் 66 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b