Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஜூலை (ஹி.ச.)
ஈசன் சிலம்பாலயா சார்பில் 1000 சிலம்பம் பயின்ற சிறுவர் மற்றும் சிறுமிகள் இணைந்து சக்கர வடிவில் சிலம்பாட்டம் விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்வு தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதனை மதிப்பீடு செய்வதற்காக பல உலக சாதனைகள் படைத்தவரும் உலகளாவிய சாதனைப் பதிவு மற்றும் பியூட்சுர் கலாம் புக் நிறுவன தலைவருமான பாபு பால கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் அவர் ஈசன் சிலம்பாலயா மற்றும் நிகழ்வில் பங்கேற்ற சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இது குறித்து ஈசன் சிலம்பாலயா நிறுவனர் ஈசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சென்னை குரோம்பேட்டை மட்டுமல்லாது மதுரை,திருநெல்வேலி, ஆந்திரா, கர்நாடக, பெங்களூரு, துபாய், அபுதாபி உள்ளிட்ட பல பகுதிகளில் ஈசன் சிலம்பாலயா சார்பில் சிலம்ப கலை பயிற்சி சிறப்பான முறையில் கற்றுத்தரப்பட்டு வருகின்றது.
எங்கள் நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட சிலம்ப பயிற்றுனர்கள் பணியாற்றி வருகின்றனர்.
சிலம்ப கலை குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில் இந்த சிலம்பம் சக்கர வடிவில் 1000 மாணவர்கள் பங்கேற்கும் உலக சாதனை நிகழ்வு இங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் 6 வயது முதல் 30 வயது வரை உள்ள மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
சிலம்பம் கலையானது ஒவ்வொரு மாவட்டத்திலும் வேறுபடுகிறது.
இவற்றை ஒருங்கிணைக்க ஒரு குழுவினை அமைத்துள்ளோம் அதன்படி விரைவில் ஒருங்கிணைப்பிற்கான பணிகள் தொடங்கவுள்ளன.
2000 ஆண்டுகளாக முடக்கப்பட்ட இந்த சிலம்ப கலையானது கடந்த 10 ஆண்டுகளாக புத்துயிர் பெற்று வருகின்றது.
இன்று வீட்டிற்கு ஒரு சிலம்பம் பயிலும் மாணவர் உள்ளார்.
மாணவர்களை சிலம்பம் விளையாட பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும்.
ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் 6 வயதிலிருந்து 60 வயது வரை அனைவரும் சிலம்பம் கற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b