மதுரையில் வீட்டின் பூட்டை உடைத்து 119 சவரன் நகை, ரூ.4 லட்சம் கொள்ளை - போலீசார் விசாரணை
மதுரை, 06 ஜூலை (ஹி.ச .) மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள கருவனூர் அன்னை பாரத் தெருவில் வசித்து வரும் காயத்ரி (வயது 34) என்பவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்த நிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க க
மதுரையில் வீட்டின் பூட்டை உடைத்து 119 சவரன் நகை, ரூ.4 லட்சம் கொள்ளை - போலீசார் விசாரணை


மதுரை, 06 ஜூலை (ஹி.ச .)

மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள கருவனூர் அன்னை பாரத் தெருவில் வசித்து வரும் காயத்ரி

(வயது 34) என்பவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்த நிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

பின்னர் படுக்கை அறையில் இருந்த பீரோவை உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த 119 சவரன் தங்க நகைகள், 2,175 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கமாக வைத்திருந்த ரூ.4 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

வெளியே சென்றிருந்த காயத்ரி இன்று காலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு நகை, பணம் திருடுபோனது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தடயவியல் நிபுணர்களுடன் சோதனை மேற்கொண்டனர்.

கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

கொள்ளை போன நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.75 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியிருப்பு பகுதியில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த பெரும் கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b