மனித-வனவிலங்கு மோதலைத் தடுக்க அதிரடி திட்டங்கள் - அமைச்சர் ரஞ்சித் குமார் அறிவிப்பு
காஞ்சிபுரம், 06 ஜூலை (ஹி.ச) காஞ்சிபுரம் ரயில்வே கேட் பகுதியில் நடைபெற்று வரும் இருவழிப் பாதை மேம்பாட்டுப் பணிகளை வனத்துறை அமைச்சர் ஆர். வீ. ரஞ்சித் குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அவர், வனப்பகுதியை
மனித-வனவிலங்கு மோதலைத் தடுக்க அதிரடி திட்டங்கள் - அமைச்சர் ரஞ்சித் குமார் அறிவிப்பு


காஞ்சிபுரம், 06 ஜூலை (ஹி.ச)

காஞ்சிபுரம் ரயில்வே கேட் பகுதியில் நடைபெற்று வரும் இருவழிப் பாதை மேம்பாட்டுப் பணிகளை வனத்துறை அமைச்சர் ஆர். வீ. ரஞ்சித் குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அவர்,

வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வனவிலங்குகள் நுழைவதால் பயிர் சேதம் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், முக்கியமான இடங்களில் பாதுகாப்பு மின்வேலி அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

இந்த மின்வேலிகள் விலங்குகளுக்கு உயிருக்கு ஆபத்து விளைவிக்காத வகையில், அவற்றை மட்டும் தடுக்கும் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்படும்.

மேலும், வனவிலங்குகளின் நடமாட்டத்தைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, வனப்பகுதிகளில் செயற்கைக்கோளுடன் இணைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.

இதன் மூலம் விலங்குகள் கிராமங்களுக்குள் நுழைவதை முன்கூட்டியே கண்டறிந்து, வனத்துறையினரும் பொதுமக்களும் உடனடியாக எச்சரிக்கப்படுவார்கள்.

இது உயிர் சேதத்தைப் பெருமளவு குறைக்கும்.

கோடை காலத்தில் கடும் வெயில் காரணமாக வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தவும் புதிய திட்டம் தயார் நிலையில் உள்ளது.

காட்டுத் தீ பரவும் இடங்களில் விரைந்து செயல்பட, ட்ரோன் மூலம் நீரைத் தெளிக்கும் நவீன கருவிகள் பயன்படுத்தப்படவுள்ளன.

இதன் மூலம் ஆட்கள் செல்ல முடியாத அடர்ந்த வனப்பகுதிகளிலும் தீயை விரைவாக அணைக்க முடியும் என்றும், வனவளத்தைப் பாதுகாக்க இது பெரிதும் உதவும்

மனித-விலங்கு மோதல் இல்லாத சூழலை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், இதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம்.

இவ்வாறு அமைச்சர் ரஞ்சித் குமார் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b