Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஜூலை (ஹி.ச.)
நடிகர் அஜித்குமார் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வர வேண்டும் என்று நடிகர் மன்சூர் அலிகான் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உங்களை அடையாளம் கண்டது சினிமா. கோடிக்கணக்கான ரசிகர்களை உங்களுக்கு உருவாக்கிக் கொடுத்ததும் சினிமாதான். தற்போது நீங்கள் கார் பந்தயத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறீர்கள்.
அது உங்களின் விருப்பமாக இருந்தாலும், உயிரைப் பணயம் வைக்கும் ஆபத்தான விளையாட்டாகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய் தற்போது தமிழக முதலமைச்சராகியுள்ள நிலையில், நீங்கள் மீண்டும் திரைத்துறைக்கு வர வேண்டும். லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, ரசிகர்களையும் மகிழ்விக்கும் வகையில் 10 தயாரிப்பாளர்கள் இணைந்து திரைப்படங்களை தயாரிக்கட்டும்.
உயர்ந்த இலட்சியத்திற்காக மீண்டும் நடிக்க வாருங்கள் என்று இரு கரம் கூப்பி, இரு கரம் நீட்டி உங்களை வரவேற்கிறேன் என மன்சூர் அலிகான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ