Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை , 06 ஜூலை (ஹி.ச.)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனத்திற்காக வருவதால், இலவச தரிசன வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை நீடித்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் 88 ஆயிரத்து 412 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களில் 31 ஆயிரத்து 273 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.
பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.5 கோடியே 5 லட்சமாக பதிவானது.
அதே நாளில் 4.24 லட்சம் லட்டுகள் விற்பனையானதாகவும், 2.55 லட்சம் பக்தர்கள் அன்னபிரசாதம் பெற்றதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், 3,001 பக்தர்கள் மருத்துவ சேவைகளை பயன்படுத்தியுள்ளனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், சிலாதோரணம் வரை வெளிப்புற வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
எஸ்.எஸ்.டி. (SSD) டோக்கன் இல்லாத சர்வதரிசனத்திற்கு சுமார் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA