ஆந்திராவில் மைக்ரோ எல்இடி ஹப் – கொரியா நிறுவனத்துடன் அமைச்சர் நாரா லோகேஷ் ஆலோசனை
சியோல் , 06 ஜூலை (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசத்தை மின்னணு மற்றும் டிஸ்ப்ளே உற்பத்தி துறையில் உலகளாவிய மையமாக மாற்றும் நோக்கில் மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தென் கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மாநில கல்வ
A


சியோல் , 06 ஜூலை (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசத்தை மின்னணு மற்றும் டிஸ்ப்ளே உற்பத்தி துறையில் உலகளாவிய மையமாக மாற்றும் நோக்கில் மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, தென் கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மாநில கல்வி, ஐடி மற்றும் மின்னணு துறை அமைச்சர் நாரா லோகேஷ், அந்நாட்டின் முன்னணி செமிகண்டக்டர் மெட்டீரியல் தயாரிப்பு நிறுவனமான Soft-Epi நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை சியோலில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பில், ஆந்திரப் பிரதேசத்தில் மைக்ரோ எல்இடி டிஸ்ப்ளே மெட்டீரியல் ஹப் அமைக்க முதலீடு செய்யுமாறு அவர் அழைப்பு விடுத்தார். மேலும், திருப்பதி ஐஐடி உடன் இணைந்து மேம்பட்ட எபிடாக்ஸி மையம் அமைப்பதற்கும், மாநில அரசு பங்களிப்புடன் ‘Soft-Epi அகாடமி’ தொடங்குவதற்கும் முன்மொழிவு வைத்தார்.

அந்த அகாடமி மூலம் GaN எபிடாக்ஸி, MOCVD மற்றும் மைக்ரோ எல்இடி போன்ற நவீன தொழில்நுட்பங்களில் ஆண்டுதோறும் 500 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த Soft-Epi நிறுவன உயர் அதிகாரிகள், தற்போது இந்தியாவில் நேரடி உற்பத்தி நடவடிக்கைகள் இல்லை என தெரிவித்தனர்.

இருப்பினும், ஆந்திர அரசின் முன்மொழிவுகள் குறித்து சாதகமாக பரிசீலித்து, எதிர்கால முதலீட்டு வாய்ப்புகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இந்த சந்திப்பு, ஆந்திரப் பிரதேசத்தில் மின்னணு மற்றும் டிஸ்ப்ளே உற்பத்தி துறையில் புதிய வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA