ஆரணி அரசு மருத்துவமனையில் ஆதார் OTP நடைமுறையால் நோயாளிகள் அவதி – 500-க்கும் மேற்பட்டோர் 3 மணி நேரம் காத்திருப்பு
திருவண்ணாமலை, 06 ஜூலை (ஹி.ச.) திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கான (OP) சீட்டு வழங்கும் பணியில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை கட்டாயமாக பதிவு செய்யும் நடைமுறை காரணமாக, 500-க்கும் மேற்பட்ட ந
அரசு மருத்துவமனை


திருவண்ணாமலை, 06 ஜூலை (ஹி.ச.)

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கான (OP) சீட்டு வழங்கும் பணியில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை கட்டாயமாக பதிவு செய்யும் நடைமுறை காரணமாக, 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சிகிச்சைக்காக வந்த முதியவர்கள், மொபைல் போன் இல்லாதவர்கள் மற்றும் ஆதார் எண்ணுடன் மொபைல் எண் இணைக்கப்படாதவர்கள் OP சீட்டு பெற முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

நீண்ட நேரம் காத்திருந்ததால் சிலர் சிகிச்சை பெறாமல் தனியார் மருத்துவமனைகளை நாடியதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

இதுகுறித்து மருத்துவமனைக்கு வந்த பொதுமக்களான மாலா மற்றும் கௌஷ்பாஷா ஆகியோர், நோயாளிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு ஆதார் OTP நடைமுறைக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து, OP சீட்டு வழங்கும் முறையை எளிமைப்படுத்த மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Hindusthan Samachar / GOKILA arumugam