ஆரணி அரசு மருத்துவமனையில் ஆதார் OTP நடைமுறையால் நோயாளிகள் அவதி
திருவண்ணாமலை, 06 ஜூலை (ஹி.ச.) திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு (OP) சீட்டு வழங்கும் போது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை கட்டாயமாக கேட்பதாக கூறப்படுகிறது. இதனால் வயதானவர்கள், மொபைல் போன் இ
Arni Government Hospital


திருவண்ணாமலை, 06 ஜூலை (ஹி.ச.)

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு (OP) சீட்டு வழங்கும் போது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை கட்டாயமாக கேட்பதாக கூறப்படுகிறது.

இதனால் வயதானவர்கள், மொபைல் போன் இல்லாதவர்கள், ஆதார் எண்ணுடன் மொபைல் எண் இணைக்காதவர்கள் உள்ளிட்ட பலர் OP சீட்டு பெற முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். இதன் காரணமாக நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகினர்.

எனவே, நோயாளிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு மாற்று நடைமுறைகளை ஏற்படுத்தி, OP சீட்டு வழங்குவதை எளிமையாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN