'பொதுவாக எம்மனசு தங்கம்' பாடலை ஜி.வி. பிரகாஷ் படத்தில் பயன்படுத்த தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 06 ஜூலை (ஹி.ச.) 1980ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இசையில் இடம்பெற்ற ''பொதுவாக எம்மனசு தங்கம்'' பாடலை, தனது அனுமதியின்றி ஜி.வி. பிரகாஷ் நடித்த ஹேப்பி ராஜ் திரைப்படத்தில் பயன்படுத்த
Happ


சென்னை, 06 ஜூலை (ஹி.ச.)

1980ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இசையில் இடம்பெற்ற 'பொதுவாக எம்மனசு தங்கம்' பாடலை, தனது அனுமதியின்றி ஜி.வி. பிரகாஷ் நடித்த ஹேப்பி ராஜ் திரைப்படத்தில் பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 'பொதுவாக எம்மனசு தங்கம்' பாடலை ஹேப்பி ராஜ் திரைப்படத்தில் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2026 மார்ச் 27ஆம் தேதி ஹேப்பி ராஜ் திரைப்படம் வெளியான நிலையில், சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / P YUVARAJ