சென்னையில் ஒரே வாரத்தில் போதைப்பொருள் வேட்டை -  54 பேர் கைது, 46.6 கிலோ கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல்
சென்னை, 06 ஜூலை (ஹி.ச) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், 12 காவல் மாவட்டங்களிலும் தனிப்படையினர் மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு (ANIU) காவலர்கள் இணைந்து தீவிர கண்காணிப்பு, வாகனத் தணிக்கை மற்றும் ரகசிய சோதனைகளை
Kanj


சென்னை, 06 ஜூலை (ஹி.ச)

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், 12 காவல் மாவட்டங்களிலும் தனிப்படையினர் மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு (ANIU) காவலர்கள் இணைந்து தீவிர கண்காணிப்பு, வாகனத் தணிக்கை மற்றும் ரகசிய சோதனைகளை மேற்கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 28 முதல் ஜூலை 4 வரை நடைபெற்ற நடவடிக்கைகளில் 54 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 46.6 கிலோ கஞ்சா, 12 கிராம் மெத்தம்பெட்டமைன், 386 போதை மாத்திரைகள், 8 செல்போன்கள், ரூ.800 ரொக்கம், 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 கார் பறிமுதல் செய்யப்பட்டன.

போதைப்பொருட்கள், குட்கா, மாவா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களது வங்கி கணக்குகளையும் முடக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சென்னை பெருநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ