Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஜூலை (ஹி.ச.)
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தக் கூட்டத்தில் உயர்கல்வித்துறையில் நீண்டகாலமாக காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்புவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
மேலும், சர்வதேச தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக விவாதிக்கப்படுகிறது.
பல்கலைக்கழக வேந்தர் விவகாரம், உயர்கல்வித்துறையில் அரசின் எதிர்கால கொள்கை முடிவுகள், துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்ட முக்கிய அம்சங்களும் ஆலோசனையில் இடம்பெற்றுள்ளன.
அதேபோல், நிதி நெருக்கடியில் இயங்கி வரும் அரசு பல்கலைக்கழகங்களின் நிதிநிலையை சீரமைப்பதற்கான திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
உயர்கல்வித்துறையில் பல முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ