Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 06 ஜூலை (ஹி.ச.)
கோவை மாவட்டம் வடவள்ளி அருகே சிறுவாணி சாலையில் உள்ள பொங்காலியூரில், பாரத் இண்டஸ்ட்ரீஸ் & குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனத்தின் பாரத் சிட்டி – 007 பிரீமியம் வில்லா மனைகள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் நடிகரும் தயாரிப்பாளருமான சத்தியராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
மேலும், தொழிலதிபர்கள், வணிகத் துறை பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் விழாவில் பங்கேற்றனர்.
நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் PMJF Lion R. பன்னீர்செல்வத்தின் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், உயர்தர குடியிருப்பு வசதிகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுமார் 9.44 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் திட்டத்தில் 189 வில்லா மனைகள் இடம்பெற்றுள்ளன. மையப் பூங்கா, நடைபயிற்சி பாதை, குழந்தைகள் விளையாட்டு பகுதி, உடற்பயிற்சி வசதிகள், விளையாட்டு மைதானங்கள், தியான மையம் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், அகலமான சாலைகள், சோலார் தெருவிளக்குகள், மழைநீர் வடிகால், குடிநீர் வசதி மற்றும் பசுமை சூழல் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்புகளும் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்தத் திட்டத்திற்கு DTCP அங்கீகாரமும் RERA பதிவும் பெறப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், முன்னணி வங்கிகள் மூலம் வீட்டுக் கடன் பெறுவதற்கான முன்அனுமதி வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அறிமுக விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திட்டத்தை நேரில் பார்வையிட்டு பயன்பெறுமாறு நிறுவனத்தின் இயக்குநர் MJF Lion R.P. அரவிந்தகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P