Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஜூலை (ஹி.ச.)
கரூர் மாவட்டத்தில் 2025 செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் நடத்திய அரசியல் பரப்புரையின் போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர் மற்றும்
100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்
இந்த கரூர் துயர சம்பவம் குறித்த வழக்கை தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அமைச்சர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து கருத்துகளை தெரிவித்து வருவதாக திமுக தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளது.
அமைச்சர்கள் மற்றும் பொறுப்பில் உள்ளவர்கள் இவ்வாறு பொதுவெளியில் கருத்து தெரிவிப்பது, சிபிஐ நடத்தும் விசாரணையின் போக்கில் தேவையற்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், நீதிமன்ற விசாரணையை பாதிக்கும் என்றும் திமுக தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
எனவே, வழக்கு முடியும் வரை சம்பந்தப்பட்டவர்கள் இந்த விவகாரம் குறித்து பேச தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் தீவிரத்தன்மையையும் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, இந்த மனுவை நாங்கள் அவசர வழக்காகக் கருதி ஜூலை 7 ஆம் தேதி விசாரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த இடையீட்டு மனுவை, உச்ச நீதிமன்ற விடுமுறைகால அமர்வு நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் ஷீல் நகு ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை விசாரிக்கிறது.
சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் சூழலில் அரசியல் தலைவர்களின் கருத்துகள் விசாரணையை பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் நாளைய விசாரணை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b