Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 06 ஜூலை (ஹி.ச.)
ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம், ஆகஸ்ட் 16 முதல் 26 வரை 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
மேலும், ஓணம் சார்ந்த சுற்றுலா நிகழ்வுகள் மாதம் முழுவதும் நடைபெற இருப்பதால், பயணிகளின் கூடுதல் தேவையை சமாளிக்கும் வகையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருப்பதாக அவர் கூறினார்.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர் மேலும் கூறியதாவது:-
இந்த ஆண்டு ஓணம் பண்டிகையையொட்டி 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. இது கடந்த ஆண்டைவிட அதிகமானதாகும்.
பயணிகளுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் சுகமான பயண அனுபவத்தை வழங்குவதில் ரெயில்வே அமைச்சகம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
கேரளாவில் ரெயில்வே கட்டமைப்பை மேம்படுத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA