Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 06 ஜூலை (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன்கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன.
மேலும், இந்த இங்கு புதிதாக மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது அணு உலை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதில் மூன்று மற்றும் நான்காவது உலைகள் அமைக்கும் பணியானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில், அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலையின் ஜெனரேட்டர் பாதுகாப்பு அமைப்பில் இரவு திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய 562 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டது.
உடனடியாக பிரச்சினையை சீராக்க, இந்தியா மற்றும் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளும், அணுமின் நிலைய தொழில்நுட்ப நிபுணர் குழுவும் இணைந்து, பழுதை சரிசெய்யும் வேலையில் இறங்கியது.
வேகமாக செயல்பட்ட இக்குழு, பழுதை விரைந்து சரி செய்து, மின் உற்பத்தியை சீராக்கியது.
Hindusthan Samachar / ANANDHAN