Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 06 ஜூலை (ஹி.ச.)
கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
பத்திரிக்கையாளர்களுடன் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற விவாதம் குறித்து விவரித்தார்.
மேலும் பத்திரிக்கையாளர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவன் பத்திரிக்கையாளர்களை மதிக்க கூடியவன் நான் என்றும் தெரிவித்தார்.
அதிமுகவும் திமுகவும் தவெகவிற்கு எதிராக கைகோர்த்து இருப்பது தொடர்பான கேள்விக்கு, அதிமுகவிற்கு திமுக ஆதரவு அளித்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்குவது என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டது உண்மை என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் கூறியுள்ளார் அவ்வாறு எடுத்திருந்தால் அதைவிட பெரிய அரசியல் மோசடி இருக்காது என்று தெரிவித்தார்.
தற்பொழுது ஆளுநரை பார்ப்பதற்கு அதிமுகவினர் திமுகவினர் செல்கிறார்கள், ஆளுநர் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலைகளை தான் எடுத்துக் கொண்டு எதுவாக இருந்தாலும் தன்னிடம் கூறலாம் என்று கூறுகிறார் என்ற வைகோ அதற்கு ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் தான் இதனை செய்ய முடியுமே தவிர ஆளுநரே இதனை செய்வேன் என்றால் இது என்ன கவர்னர் ஆட்சியா? என்று வினவினார்.
ஆளுநரிடம் திமுக சார்பில் கொடுக்கப்பட்ட ஒரு புகாரில் 356வது பிரிவை பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அந்த பிரிவு என்னவென்றால் மாநில ஆட்சிகளை டிஸ்மிஸ் செய்வதற்கான பிரிவு என்று குறிப்பிட்ட அவர் ஏன் அதனை பயன்படுத்த வேண்டும் என்று திமுக நினைக்கிறது? அப்படி என்றால் கவர்னர் ஆட்சியை கொண்டு வரவேண்டும் என்று நினைக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.
குதிரை பேரம் நடக்கிறது என்று திமுக கூறினார் கம்பம் சட்டமன்ற தொகுதியில் மதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை கட்சியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்து மீண்டும் அவரை திமுக சார்பில் போட்டியிட வைத்து ஜெயிக்க வைத்தது பெருச்சாளி பேரமா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் இது போன்ற குதிரை பேரத்தை தொடங்கி வைத்ததே திமுக தான் என்று விமர்சித்தார். இதுபோன்றுதான் அனிதா ராதாகிருஷ்ணனையும் அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்ய வைத்து திமுக வில் ஜெயிக்க வைத்தார் என்றார்.
திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சி அமைப்பது என்று எடுக்கப்பட்ட நிலைப்பாடு அதிமுகவில் இருந்த சிவி சண்முகம் உட்பட பலருக்கும் பிடிக்கவில்லை என்றும் அதனை 30க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தார்கள் பிறகுதான் அதுபோன்று எதுவும் நடக்கவில்லை என்று பூசி மொழுகி பேச ஆரம்பித்தார்கள் என்று விமர்சித்தார்.
ஆனால் அவ்வாறு ஒரு பேச்சு வார்த்தை நடந்தது என்று சிபிஎம் பேபி, சண்முகம், காதர் மொய்தீன் கூறியுள்ளனர் என்றார்.
இந்த ஆட்சி என்ன செய்து விட்டது என்று திமுகவினர் கேட்கிறார்கள் ஜனநாயகத்தை நாசப்படுத்துகின்ற ஊழல் கமிஷன் கடந்த ஆட்சியில் நடைபெற்றதாகவும் எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கபட்டதாக கட்சிக்கு அப்பாற்பட்ட நிறுவனதாரர்கள் தொழில் செய்பவர்களே கூறினார்கள் ஆனால் தற்பொழுது இந்த ஆட்சியில் கமிஷன் கேட்கப்படுவது இல்லை என்று அவர்களே கூறுகிறார்கள் கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார்கள் கமிஷன் கட்டிங் கரப்ஷன் மீட்கப்பட்டுள்ளது இதுதான் இந்த அரசின் இமாலய சாதனை என்று பெருமை தெரிவித்தார்.
ஆட்சியை இழந்து விட்டு கொஞ்ச நாள் கூட உங்களால் நிம்மதியாக இருக்க முடியாதா என்று திமுகவை பார்த்து கேட்ட அவர் தமிழக வெற்றி கழகத்தை ஆதரித்து பேசுவதால் மிகவும் கோபமுடன் என்னுடன் நடந்து கொள்வதாக கூறினார்.
எங்களை நடத்திய விதமும் தேர்தலுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்ட விதமும் மற்ற கட்சிகளுக்கு சமமாக எங்களையும் நடத்துங்கள் என்று கேட்டும் நான்கு சீட்டுகள் தான் கொடுப்போம் வேற பேச்சுக்கே இடமில்லை என்று முகத்தில் அடித்தார் போன்று சொன்னார்கள் என்று தெரிவித்தார்.
கூட்டணி தர்மத்திற்கு கட்டுப்பட்டு திமுகவை ஆதரித்து நான் பிரச்சாரம் மேற்கொண்டேன் என்றும் எங்களை நடத்திய விதத்தில் எங்களுடைய தொண்டர்களும் தோழர்களும் நூற்றுக்கு நூறு சதவிகிதம் இந்தக் கூட்டணியில் தொடரக்கூடாது என்றுதான் கூறினார்கள் திமுகவுடன் இருந்து விலகிக் கொள்கிறோம் என்று அறிவித்தவுடன் எங்களது தொண்டர்கள் அனைவரும் ஆர்ப்பரித்து மகிழ்ந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் அதிமுகவிற்கு திமுக ஆதரவு கொடுக்கிறது என்றால் ஏதோ ஒன்று இருக்கிறது என்று Something Wrong என்றார்.
சோபா வாங்கியவுடன் அனைவரும் சென்று விட்டார்கள் என்ற உதயநிதி கூறியது தொடர்பான கேள்விக்கு அந்த நண்பருக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P