நெல்லை இரட்டை கொலை வழக்கு - 4 ஆவது நாளாக உடல்களை வாங்க மறுப்பு
திருநெல்வேலி, 06 ஜூலை (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 02.07.2026 அன்று நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில், இதுவரை 7 எதிரிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், தொடர் புலன் விசாரணையின் அடிப்பட
Nellai Double Murder Case


திருநெல்வேலி, 06 ஜூலை (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 02.07.2026 அன்று நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில், இதுவரை 7 எதிரிகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், தொடர் புலன் விசாரணையின் அடிப்படையில், இவ்வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணன் (29), த/பெ. குருநாதன், மூலச்சி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் சம்பந்தமாக தகவல் கிடைக்கப்பெற்று அவரை கைது செய்ய காவல்துறையினர் ப்ளூ மவுண்ட் அட்டை கம்பெனி அருகே, 80 அடி கால்வாய் பகுதியில் சென்றபோது, காவல்துறையினரை பார்த்து தப்பிக்கும் எண்ணத்தில் ஓடிய எதிரி, தவறி கீழே விழுந்ததில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு , தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

இதன்மூலம், இவ்வழக்கில் இதுவரை மொத்தம் 8 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் தொடர்புடைய மீதமுள்ள எதிரிகளை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இருந்த போதிலும் இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து, உறவினர்கள் 4 ஆவது நாளாக பிடிவாதம் காட்டி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN