நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்- முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு
சென்னை, 06 ஜூலை (ஹி.ச) மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் செயல்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார். இந்த ஆய்வின் போது, திட்டத்தின் தற்போதைய செயல்பாடு, குடிநீர் உற்பத்தித்
Vijay


சென்னை, 06 ஜூலை (ஹி.ச)

மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் செயல்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.

இந்த ஆய்வின் போது, திட்டத்தின் தற்போதைய செயல்பாடு, குடிநீர் உற்பத்தித் திறன் மற்றும் விரிவாக்கப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் விரிவான விளக்கங்களை கேட்டு அறிய உள்ளார்.

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான குடிநீர் விநியோகத்தை மேலும் மேம்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

நெம்மேலியில் செயல்பட்டு வரும் 110 மற்றும் 150 மில்லியன் லிட்டர் (MLD) திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் நாள்தோறும் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதில், முதல் 110 MLD திறன் கொண்ட ஆலை 2013-ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது.

தொடர்ந்து, ₹1,516 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 150 MLD திறன் கொண்ட இரண்டாவது ஆலை 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

Hindusthan Samachar / P YUVARAJ