Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 06 ஜூலை (ஹி.ச.)
பரிதிமாற் கலைஞர்
(வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார்) என்பவர் மிகச்சிறந்த தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும் ஆவார்.
தமிழை உயர்தனிச் செம்மொழி என்று முதன்முதலில் நிரூபித்த பெருமை இவருக்கு உண்டு.
தமிழுக்கு தொண்டாற்றிய பரிதிமாற் கலைஞர் 1870ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் பிறந்தார்.
இவரது இயற்பெயர் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி.
சென்னை கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை (B.A.) பயின்று, தத்துவத்திலும் தமிழிலும் முதல் மாணவராகத் தேறினார்.
வடமொழிச் சொற்கள் கலவாத தனித்தமிழின் மீது கொண்ட பற்றால், தன் பெயரான 'சூரியநாராயண சாஸ்திரி' என்பதை 'பரிதிமாற் கலைஞர்' என மாற்றிக்கொண்டார்.
இவர் தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவர் ஆவார்.
இளம்வயது முதலே தமிழ் மொழியின் மீதும், இலக்கணத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
தமிழ் மொழி ஒரு உயர்தனிச் செம்மொழி என்பதைத் தனது 'செந்தமிழ்' இதழ் கட்டுரைகள் மூலம் உலகிற்கு நிலைநாட்டினார்.
மொழிநடை: தமிழோடு சமஸ்கிருதம் கலப்பதைத் தீவிரமாக எதிர்த்தார்.
தமிழ் அறிவும், ஆர்வமும் கொண்ட மாணவர்களுக்கு தொல்காப்பியம், நன்னூல், சைவ சமய சாஸ்திர நூல்களைக் கற்பித்தார்.
சென்னை செந்தமிழுரைச் சங்கத்தை நிறுவினார்.
ரூபாவதி', 'கலாவதி' போன்ற நாடக நூல்களையும், 'நாடகவியல்' என்னும் நாடக இலக்கண நூலையும் இயற்றினார்.
இவர் சூரியநாராயண சாஸ்திரியார் என்ற தனது வடமொழிப் பெயரை பரிதிமாற் கலைஞர் என தமிழில் மாற்றிக்கொண்டார்.
இவர் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
தமிழில் முதன்முதலில் 'சானெட்' (Sonnet) எனப்படும் பதினான்கு வரிச் செய்யுள் வடிவத்தை அறிமுகம் செய்து 'தனிப்பாசுரத்தொகை' நூலை எழுதினார்.
மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் அமைய பாடுபட்டவர்களில் இவரும் ஒருவர்.
திராவிட சாஸ்திரி என சிறப்பிக்கப்பட்ட பரிதிமாற் கலைஞர் 1903ஆம் ஆண்டு மறைந்தார்.
தனது 33ஆம் வயதிலேயே (நவம்பர் 2, 1903) மறைந்தாலும், அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு என்றும் அழியாதது.
Hindusthan Samachar / Durai.J