Enter your Email Address to subscribe to our newsletters

பிரயாக்ராஜ், 06 ஜூலை (ஹி.ச)
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று மதியம் 1 மணி அளவில் பிரயாக்ராஜில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள பிரேரணா பூங்காவை திறந்து வைக்கவுள்ளார்.
ஜனசங்க நிறுவனர் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், மற்றும் விஸ்வ இந்து பரிஷத்தின் முன்னாள் சர்வதேச தலைவர் அசோக் சிங்கல் ஆகியோரின் வெண்கலச் சிலைகளையும் அவர் திறந்து வைக்கவுள்ளார்.
தனது வருகையின்போது, முதல்வர் யமுனை நதியில் 'ஏக்தா படகுப் போட்டியையும் கொடியசைத்து தொடங்கி வைப்பதுடன், பூங்காவில் நடைபெற்றவுள்ள பொதுக்கூட்டத்திலும் உரையாற்றுகிறார்.
டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவாக நடத்தப்படவுள்ள இந்த போட்டியில் இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட படகுகள் பங்கேற்க தயார் நிலையில் உள்ளன.
திறப்பு விழாவைத் தொடர்ந்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் பரேட் மைதானத்தில் உள்ள பிரயாக்ராஜ் மேளா ஆணையத்தின் கலையரங்கிற்குச் சென்று, பொதுப்பணித் துறை மற்றும் பிற துறைகளின் சார்பில் பிரயாக்ராஜ் மண்டலத்தில் ரூ.2,500 கோடிக்கும் மேலான மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் 1,553 பணிகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளார்.
யமுனை நதிக்கரையில் காளி காட் அருகே பிரயாக்ராஜ் மாநகராட்சியால் ரூ.1 கோடி செலவில் பிரேரணா பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
டாக்டர் முகர்ஜி, அடல் பிஹாரி வாஜ்பாய், மற்றும் அசோக் சிங்கல் ஆகியோர் தேச சேவை, கலாச்சார தேசியம், சமூக நல்லிணக்கம் மற்றும் பொதுநலனுக்கு உத்வேகம் அளிப்பவர்களாக கருதப்படுவதால், அவர்களின் வாழ்க்கை மதிப்புகளையும் கருத்துகளையும் எதிர்கால தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதே இந்தப் பூங்காவின் நோக்கம் என்று அம்மாநில அரசு கூறியுள்ளது.
சிலைகளைச் சுற்றி தோட்டங்கள், விளக்குகள், நடைபாதைகள், இருக்கை வசதிகள், அழகுபடுத்தும் பணிகள் மற்றும் தூய்மை வசதிகள் ஆகியவை இந்தப் பூங்காவில் இடம்பெற்றுள்ளன.
பிரயாக்ராஜில் கங்கை மற்றும் யமுனை நதிக்கரைகளை புத்துயிரூட்ட மாநில அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அம்மாநில மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b