Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஜூலை (ஹி.ச.)
இசைஞானி இளையராஜா அவரது இசை வளர்ச்சிக்கு ஆரம்பகாலத்தில் மிகப்பெரிய தூணாகவும், பக்கபலமாகவும் இருந்தவர் அவருடைய மூத்த அண்ணனும், திரையுலகின் முன்னணி தயாரிப்பாளருமான ஆர்.டி.பாஸ்கர்.
அவரைத் தொடர்ந்து, தற்போது அவருடைய கடைசி புதல்வனான ஜெயன் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
காதல் பின்னணியைக் கொண்ட ஒரு அழுத்தமான மியூசிக்கல் சப்ஜெக்ட்
(Love Musical Subject) திரைப்படமாக இது உருவாகிறது.
குடும்ப நட்பிற்காக கதையைக் கூட கேட்காமல் திரண்ட முன்னணி பிரபலங்கள்!
தயாரிப்பாளர் ஆர்.டி.பாஸ்கர் அவரது மகன் ஜெயன் திரையுலகில் அறிமுகமாகிறார் என்றதும், திரையுலகில் ஜெயன் குடும்பத்தோடு உள்ள நட்புக்காக கதையைக்கூட கேட்காமல் என் நண்பனுக்காக நானே இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கிறேன் என்று ரமணன் பாலகங்காதரன் தானாகவே முன் வந்தார்.
தன் தம்பிக்காக இயக்குனர் வெங்கட் பிரபு ,நான் கதை தருகிறேன் என்றும்,யுவன் சங்கர் ராஜா நான் இசை அமைக்கிறேன் என்றும், இயக்குனர் சுதா கொங்கரா நான் கிரியேட்டிவ் புரொடியூசராக
(Creative Producer) இருக்கிறேன் என்றும் தாங்களாகவே முன்வந்து இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளனர்.
முன்னணி திரைப் பிரபலங்கள் அனைவரும் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, தயாரிப்பாளர் ஆர்.டி.பாஸ்கர் குடும்பத்தின் மீதான நீண்டகால நட்பிற்காக மட்டுமே இந்தத் திரைப்படத்தில் ஒன்றிணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நட்சத்திரப் பட்டாளமும், பிரம்மாண்ட கூட்டணியும்,
இத்திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகும் ஜெயனுடன் இணைந்து சோனா ஒலிக்கல், வாகை சந்திரசேகர், குரு சோமசுந்தரம், ரோஜு, பிபியன், ஆர்யா லட்சுமி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
Hindusthan Samachar / Durai.J