தவெக எம்.எல்.ஏ. குதிரை பேரம் வழக்கு - செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் முன்ஜாமீன் மனு விசாரணை ஜூலை 8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை, 06 ஜூலை (ஹி.ச) தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு தொடர்பான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்த
Senthil


சென்னை, 06 ஜூலை (ஹி.ச)

தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு தொடர்பான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

இந்த வழக்கு, எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதிக்கு மாற்றி ஒதுக்கப்பட்ட நிலையில், முன்ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, வழக்கு தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய காவல்துறை தரப்பில் கூடுதல் அவகாசம் வழங்குமாறு அரசு தரப்பு கோரிக்கை வைத்தது. காவல்துறையின் கோரிக்கையை பதிவு செய்த நீதிமன்றம், பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி, அசோக்குமார் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற அச்சத்தில் அசோக்குமார் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ