தவெக எம்எல்ஏ பயன்படுத்தும் கார் மோதி முதியவருக்கு கால் முறிவு
திருவண்ணாமலை, 06 ஜூலை (ஹி.ச.) திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். இதற்காக நேற்று இரவு திருவண்ணாமலைக்
Accident


திருவண்ணாமலை, 06 ஜூலை (ஹி.ச.)

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.

இதற்காக நேற்று இரவு திருவண்ணாமலைக்கு வருகை தந்த அவர் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த நிலையில், இன்று காலை வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்தவருக்கு மிகவும் நெருக்கமானவர் பெயரில் சாந்தி நிர்மலா என்ற பெயரில் உள்ள TN 19 BV 7777 எண் கொண்ட காரில் அக்கட்சியின் கொடியை கட்டிக்கொண்டு ஓட்டுனர் மணி அதிவேகமாக சாலையில் வந்து கொண்டிருந்தார்.

குறிப்பாக தமிழக வெற்றி கழக போளூர் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் இந்த காரை அதிகமாக பயன்படுத்தி வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட வேலூர் சாலையில் அதிவேகமாக வந்து கொண்டிருந்த பொழுது, அதிகாலை நேரத்தில் திருவண்ணாமலயை சேர்ந்த ஆதாம் என்ற முதியவர் தொழுகைக்காக இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயற்சித்த பொழுது அதிவேகமாக வந்த கார் மோதியதில் அவர் நிலைகுலைந்து அவரது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு 20 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டார்.

தொடர்ந்து காரில் பயணித்த ஓட்டுனர் மணி உள்ளிட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது, இது தொடர்பாக திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரை அங்கிருந்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

ஆனால் இதுவரை ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினரின் உறவினர்கள் என்பதால் டிரைவர் உள்ளிட்ட எவர் மீதும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தியும் வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN