Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 06 ஜூலை (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
குறிப்பாக, இன்று திங்கட்கிழமை வேலை நாட்கள் என்ற போதிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
குறிப்பாக, நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலா வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்றும் குற்றாலம் பகுதியில் தங்கி அருவிகளில் ஆனந்த குளியல் போட்டு வரும் நிலையில் குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
குறிப்பாக, தற்போது மழைக்கால சீசன் ஆனது தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டு வருவதால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN