Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 06 ஜூலை (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் கடல் உணவுகள் பதப்படுத்தும் புனித பீட்டர் & பால் கடல் உணவு ஏற்றுமதி எனும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இதன் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிந்து 83 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு, 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
தொழிற்சாலையில் இருந்த 400 டன் பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகள் மாற்றுக்கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த நிலையில் தொழிற்சாலையில் இருந்து அம்மோனியாவை பாதுகாப்பாக அகற்றும் பணிகள் சனிக்கிழமை (ஜூலை 4) தொடங்கியது.
தொடர்ந்து, 2-ஆம் நாளாக அந்த பணிகள் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றன. தொழிற்சாலையில் 3 டேங்கர்களில் சேமித்து வைக்கப்பட்ட அம்மோனியா வாயு நேற்றைய தினம் பாதுகாப்பாக அகற்றப்பட்ட நிலையில், குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட பகுதிகளில் பைப்புகளில் தேங்கிய அம்மோனியாவை வெளியேற்றி டேங்கர் லாரியில் மாற்றம் செய்யும் பணிகள் 2-ஆவது நாளாக நடைபெற்றது.
சென்னையில் உள்ள மணலி பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு கொண்டு சென்று ஆய்வு செய்து பின்னர் ஓசூருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்
அமோனியா நிரப்பிய டேங்கர் லாரி புறப்பட்டு சென்றதைத் தொடர்ந்து போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வாகனங்கள் வழக்கம் போல் அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் மூன்றாவது நாளாக அம்மோனியா அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், அம்மோனியா வாயு முழுமையாக அகற்றப்பட்ட பிறகு தொழிற்சாலைக்கு சீல் வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் கவிதா தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN