Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு புதிதாக 2,000 மின்சார ஏசி பேருந்துகளை வாங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போக்குவரத்துத் துறையின் வருவாயை அதிகரிக்கும் வகையில் பல்வேறு செயல்திட்டங்களை அரசு வகுத்து, அவற்றை படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சாதாரண பொதுமக்களும் குறைந்த கட்டணத்தில் ஏசி பேருந்துகளில் பயணம் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில், அடுத்த மூன்று மாதங்களுக்குள் 2,000 புதிய மின்சார ஏசி பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
இந்த மின்சார பேருந்துகள் நவீன வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
மேலும், ஒருமுறை முழுமையாக பேட்டரியை சார்ஜ் செய்தால் சுமார் 300 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக அவை இருக்கும் என தகவல் தெரிவிக்கிறது.
Hindusthan Samachar / P YUVARAJ