Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஜூலை (ஹி.ச.)
தவெக ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக எழுந்துள்ள புகார் தொடர்பான வழக்கில், திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் இன்று போலீசார் முன் ஆஜராவார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த வழக்கில் விசாரணைக்காக இன்று ஆஜராகுமாறு சென்னை போலீசார் இருவருக்கும் சம்மன் அனுப்பியிருந்தனர்.
செந்தில் பாலாஜியின் கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள இல்லத்திற்குச் சென்று, அவரது தந்தையிடம் போலீசார் சம்மனை வழங்கியிருந்தனர்.
இந்த வழக்கில், தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக கூறப்படும் திருநாவுக்கரசு உள்ளிட்ட 9 பேரை போலீசார் ஏற்கெனவே கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதானவர்கள் அளித்ததாக கூறப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையில், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், சம்மனின்படி செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் இன்று போலீசார் முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார்களா அல்லது அவகாசம் கோருவார்களா என்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P