Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஜூலை (ஹி.ச)
சென்னை தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து தாம்பரம் காவல் ஆணையரகத்தின் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இருவரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வினய் குமார் மற்றும் சூரஜ் குமார் என்பது தெரியவந்தது.
சோதனையில், அவர்களிடம் இருந்து சிறிய பொட்டலங்களாக பிரித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1.5 கிலோ உயர் ரக கஞ்சா கைப்பற்றப்பட்டது.
விசாரணையில், இருவரும் கடந்த சில மாதங்களாக தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் அருகே மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது அம்பலமானது.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், கஞ்சா எங்கிருந்து கடத்தி வரப்பட்டது,
இவர்களுக்கு பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் தாம்பரம் மாநகர காவல் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b