Enter your Email Address to subscribe to our newsletters

லக்னோ, 06 ஜூலை (ஹி.ச.)
உத்தரப்பிரதேச மாநிலம்,
பாரபங்கி மாவட்டம் ஷாபூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், ரசாயனங்கள் கலந்து தேயிலை தூள் தயாரிக்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் இணைந்து அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையின் போது, எந்தவித உரிமமும் இன்றி அந்த நிறுவனம் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது.
மேலும் ரசாயனங்கள் கலந்து கலப்பட தேயிலை தயாரிக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அங்கு இருந்த சுமார் 15 கிலோ தேயிலை, ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள கலப்பட தேயிலை பொருட்கள் மற்றும் போலி லேபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA