Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஜூலை (ஹி.ச.)
'விக்சித் பாரத் ஜி ராம் ஜி' திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு முதற்கட்ட தவணையாக ரூ.2,176.84 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய வேளாண், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில்,
மத்திய அரசின் இந்த மக்கள் நலத் திட்டத்தின் மூலம் கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் வேலை நாட்கள் 100-லிருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூ.300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான கிராமப்புற குடும்பங்களின் பொருளாதார நிலை மேம்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் பலன்கள் தகுதியுள்ள ஏழை, எளிய மக்களுக்கு முழுமையாகச் சென்றடைவதை தமிழக முதல்வர் விஜய் உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P