வண்டலூர் அருகே இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம் – பெரும் விபத்து தவிர்ப்பு
சென்னை, 06 ஜூலை (ஹி.ச.) சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தைச் சேர்ந்த ZA-1420 ஹெலிகாப்டர், இன்று காலை பயிற்சி பறப்பில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட
ஹெலிகாப்டர்


சென்னை, 06 ஜூலை (ஹி.ச.)

சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தைச் சேர்ந்த ZA-1420 ஹெலிகாப்டர், இன்று காலை பயிற்சி பறப்பில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இன்று காலை சுமார் 9 மணியளவில் ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்த இந்திய விமானப்படை அதிகாரிகள் உடனடியாக மீட்பு மற்றும் தொழில்நுட்பக் குழுவினரை அனுப்பினர்.

பழுதுபார்க்கும் பணிக்காக மேலும் மூன்று ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வானில் வட்டமிட்டன. பின்னர் அவை ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கி, தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் பழுதுபார்க்கும் குழுவினரை இறக்கிவிட்டு புறப்பட்டுச் சென்றன.

தற்போது சம்பவ இடத்தில் ஹெலிகாப்டரின் இயந்திரக் கோளாறை சரிசெய்யும் பணியில் விமானப்படை தொழில்நுட்பக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டதால், கீரப்பாக்கம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

இந்த சம்பவத்தில் உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / GOKILA arumugam