Enter your Email Address to subscribe to our newsletters

மத்திய பிரதேசம், 06 ஜூலை (ஹி.ச.)
புதிய வக்ஃப் (திருத்த) சட்டம், 2025-ன் அமல்படுத்தலுக்குப் பிறகு, அதன் விதிகளின்படி மாநில வக்ஃப் வாரியத்தை மறுசீரமைத்த முதல் மாநிலமாக மத்தியப் பிரதேசம் உருவெடுத்துள்ளது.
மாநில முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான அரசு இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
புதிய 10 உறுப்பினர்கள் கொண்ட வக்ஃப் வாரியத்தில், முதல் முறையாக இரண்டு இந்து உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தூரைச் சேர்ந்த மனோஜ் மல்பானி மற்றும் குனா மாவட்டத்தின் அனிமேஷ் பார்கவா ஆகியோர் வாரிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்பு மாநில வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் இடம்பெறுவது வழக்கமாக இல்லாத நிலையில், புதிய சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சன்வர் பட்டேல் மீண்டும் மத்தியப் பிரதேச வக்ஃப் வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா உள்ளிட்ட பலரும் வாரியத்தில் தொடர்கின்றனர்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆணையருiம் பதவிவழி உறுப்பினராக இடம்பெற்றுள்ளார்.
மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வக்ஃப் சட்டம், 1995-ன் (2025-ஆம் ஆண்டு திருத்தத்துடன்) பிரிவு 13(1) மற்றும் பிரிவு 14-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி புதிய வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை புதிய வக்ஃப் சட்டத்தை விரைவாக செயல்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P