தென்காசி அருகே கஞ்சா விற்பனை - 3 இளைஞர்கள் கைது, 300 கிராம் பறிமுதல்
தென்காசி, 07 ஜூலை (ஹி.ச) தென்காசி மாவட்ட காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், திருவேங்கடம் பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த மூன்று இளைஞர்களை பிடித்து விசார
தென்காசி அருகே கஞ்சா விற்பனை - 3 இளைஞர்கள் கைது, 300 கிராம் பறிமுதல்


தென்காசி, 07 ஜூலை (ஹி.ச)

தென்காசி மாவட்ட காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், திருவேங்கடம் பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த மூன்று இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்கள் ரங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த காட்டு ராஜா, சேவல்பட்டி பகுதியைச் சேர்ந்த சண்முக ராஜ் மற்றும் குருசாமி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து சுமார் 300 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்

மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், இவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது, வேறு யாருக்கெல்லாம் விற்பனை செய்துள்ளனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b