திருச்சி அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் - புறக்கணித்த முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் பா.குமார் மற்றும் பரஞ்சோதி
சென்னை, 08 ஜூலை (ஹி.ச.) திருச்சியில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் மாவட்டச் செயலாளர்களான பா.குமார் மற்றும் பரஞ்சோதி கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் இரண்டு அணி
அதிமுக


சென்னை, 08 ஜூலை (ஹி.ச.)

திருச்சியில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் மாவட்டச் செயலாளர்களான பா.குமார் மற்றும் பரஞ்சோதி கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் இரண்டு அணிகள் உருவான நிலையில், இருவரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர்கள் வகித்து வந்த மாவட்டச் செயலாளர் பொறுப்புகள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் பறிக்கப்பட்டன.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பா.குமார் மற்றும் பரஞ்சோதி இருவரும் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் பா.குமார் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அதே நேரம், பரஞ்சோதிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P