Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை, 08 ஜூலை (ஹி.ச.)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விடுமுறை மற்றும் விசேஷ நாட்களை முன்னிட்டு, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனால், இலவச சர்வதரிசனத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை தொடர்கிறது.
இந்த நிலையில், ஒரே நாளில் 81 ஆயிரத்து 692 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
அவர்களில் 35 ஆயிரத்து 361 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.
பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.4 கோடியே 72 லட்சமாக பதிவானது.
அதேநாளில் 4.17 லட்சம் லட்டுகள் விற்பனையானதாகவும், அன்னபிரசாதம் பெற்ற பக்தர்களின் எண்ணிக்கை 2.05 லட்சமாக இருந்ததாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், கோவிலில் செயல்பட்டு வரும் மருத்துவ சேவைகளை 2,793 பக்தர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், சிலாதோரணம் வரை வெளிப்புற வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
எஸ்.எஸ்.டி. டோக்கன் இல்லாமல் சர்வதரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA