இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்காளதேச இளைஞர் கைது
கவுகாத்தி , 08 ஜூலை (ஹி.ச.) வங்காளதேச எல்லையை ஒட்டியுள்ள அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக நுழையும் நபர்களை தடுக்கும் வகையில் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இருநாட்டு எல்லைப் பகுதிகளில் போலீசார் மற்றும்
A


கவுகாத்தி , 08 ஜூலை (ஹி.ச.)

வங்காளதேச எல்லையை ஒட்டியுள்ள அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக நுழையும் நபர்களை தடுக்கும் வகையில் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், இருநாட்டு எல்லைப் பகுதிகளில் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணிகளை அதிகரித்துள்ளனர்.

இந்த நிலையில், வங்காளதேசத்தில் இருந்து ஒருவர் சட்டவிரோதமாக அசாமுக்குள் நுழைந்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஹைலகண்டி மாவட்டத்தில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது வங்காளதேசத்தை சேர்ந்த ஷஹித் அகமது (42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,

அவர் வங்காளதேசத்தின் சைஹட் மாவட்டம் ரசுல்பூர் கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

மேலும், அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் இருப்பதும், அவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் வசித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், ஷஹித் அகமது கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக மேகாலயா மாநிலத்துக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

அங்கு அவர் இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

பின்னர் இருவரும் வங்காளதேசம் சென்றுள்ளனர்.

இதற்கிடையே, ஷஹித் அகமதுவின் மனைவிக்கு இந்திய குடியுரிமை கிடைத்த நிலையில், அவர் தனது மகளுடன் இந்தியா வந்து அசாமில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் ஷஹித் அகமது தொடர்ந்து வங்காளதேசத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தனது மனைவி மற்றும் மகளை மீண்டும் வங்காளதேசத்துக்கு அழைத்து செல்வதற்காக ஷஹித் அகமது சட்டவிரோதமாக அசாமுக்குள் நுழைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவரிடம்,தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA