பரந்தூர் விமான நிலையம் - அமைச்சர் நிர்மல் குமார் கருத்துக்கு நாராயணன் திருப்பதி கடும் கண்டனம்
சென்னை, 08 ஜூலை (ஹி.ச) பரந்தூரில் விமான நிலைய ஓடுதளம் அமைக்க முடியாது என தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்திருப்பது உண்மைக்கு புறம்பானதும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியுமாகும் என்று தமிழக பாஜக தல
Narayanan


Bh


சென்னை, 08 ஜூலை (ஹி.ச)

பரந்தூரில் விமான நிலைய ஓடுதளம் அமைக்க முடியாது என தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்திருப்பது உண்மைக்கு புறம்பானதும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியுமாகும் என்று தமிழக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்காக பரந்தூரை தேர்வு செய்தது முந்தைய திமுக அரசே என்றும், திட்டத்திற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதுடன், விரிவான முன்சாத்திய ஆய்வறிக்கையும் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் தமிழக அரசால் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இரட்டை ஓடுதளம் அமைப்பது தொடர்பாக இந்திய விமான நிலைய ஆணையம், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆய்வு மேற்கொண்ட பிறகே மத்திய அரசு 2024-ல் இட அனுமதியும், 2025-ல் கொள்கை ரீதியிலான அனுமதியும் வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீர்நிலைகள் உள்ளிட்ட சவால்கள் குறித்து முன்கூட்டியே ஆய்வு செய்யப்பட்டு, நவீன பொறியியல் தொழில்நுட்பங்கள் மூலம் அவற்றை சமாளிக்க முடியும் என நிபுணர்கள் பரிந்துரைத்திருந்த நிலையில், தற்போது ஓடுதளம் அமைப்பது சாத்தியமில்லை என அமைச்சர் நிர்மல் குமார் கூறுவது தொழில்நுட்ப காரணங்களால் அல்ல; அரசியல் நோக்கத்தால் என நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.

இந்த நிலைப்பாடு தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் சென்னை விமானப் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முயற்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய அரசின் அனுமதி பெற்ற பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை காலதாமதமின்றி செயல்படுத்த வேண்டும் அல்லது அதற்கு மாற்றாக சிறந்த திட்டத்தை அரசு முன்வைக்க வேண்டும் என்றும், பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் மாற்று வாழ்வாதார வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ