சமூக நீதித் துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் இன்று ஆலோசனை
சென்னை, 08 ஜூலை (ஹி.ச.) சமூக நீதித் துறையின் செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து தமிழக முதலமைச்சர் விஜய் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சமூக நீதித் துறை அமைச்சர் மற்றும் துறைய
சமூக நீதித் துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் இன்று ஆலோசனை


சென்னை, 08 ஜூலை (ஹி.ச.)

சமூக நீதித் துறையின் செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து தமிழக முதலமைச்சர் விஜய் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சமூக நீதித் துறை அமைச்சர் மற்றும் துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இன்று மாலை 4 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் சமூக நீதியை உறுதிப்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளது.

குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக செயல்படுத்தப்படும் கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மாநிலம் முழுவதும் சாதிய பாகுபாடுகளை ஒழித்து, அனைத்து சமூகத்தினருக்கும் சம வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் புதிய திட்டங்களை வகுப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் முதல்வர் அறிவுறுத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக நீதி தொடர்பான புகார்களை விரைந்து தீர்ப்பதற்கு சிறப்பு கண்காணிப்பு குழு அமைப்பது குறித்தும், மாவட்ட அளவில் துறையின் செயல்பாடுகளை வலுப்படுத்துவது குறித்தும் முதல்வர் விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.

Hindusthan Samachar / vidya.b