சென்னை - சேலம் விரைவு ரயில் 10 மணி நேரம் தாமதம் - பயணிகள் கடும் அவதி
சென்னை, 08 ஜூலை (ஹி.ச.) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நேற்று இரவு 11.55 மணிக்கு சேலத்துக்கு புறப்பட வேண்டிய சென்னை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 10 மணி நேரம் தாமதமாக இன்று காலை 10 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் நூற்றுக்கணக்கா
Chennai-Salem Express delayed by 10 hours


சென்னை, 08 ஜூலை (ஹி.ச.)

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நேற்று இரவு 11.55 மணிக்கு சேலத்துக்கு புறப்பட வேண்டிய சென்னை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 10 மணி நேரம் தாமதமாக இன்று காலை 10 மணிக்கு புறப்பட்டு சென்றது.

இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் இரவு முழுவதும் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

ரயில்வே அதிகாரிகள் தரப்பில், தொழில்நுட்ப கோளாறு மற்றும் இயக்க காரணங்களால் இந்த தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள், முறையான அறிவிப்பு இல்லாததால் பெரும் சிரமத்துக்கு உள்ளானதாக புகார் தெரிவித்தனர்.

குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் அவசர பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ள இருந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

ரயில் தாமதம் குறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் கூறினாலும், பலருக்கு தகவல் கிடைக்கவில்லை என பயணிகள் தெரிவிக்கின்றனர்.

தாமதமாக புறப்பட்ட ரயில், வழக்கமான நேரத்தை விட சுமார் 10 மணி நேரம் தாமதமாகவே சேலத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அடுத்தடுத்த பயண திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

இதுபோன்ற தாமதங்களை தவிர்க்கவும், பயணிகளுக்கு உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்கவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b