Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 08 ஜூலை (ஹி.ச.)
சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றி வந்த 24 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, அனைத்து மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து புலனாய்வு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த கோபால் செம்பியம் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராகவும், வளர்மதி அரும்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராகவும், சங்கர் அமைந்தகரை சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராகவும், செந்தில் விநாயகம் ஜாம்பஜார் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராகவும், ராமகிருஷ்ணன் அண்ணா சதுக்கம் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராகவும், ஜனார்த்தனன் திரு.வி.க.நகர் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராகவும், தெய்வநாயகி ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செம்பியம் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராக இருந்த சிரஞ்சீவி யானைக்கவுனி குற்றப்பிரிவுக்கும், அமைந்தகரை சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராக இருந்த முனீஸ் சேகர் விருகம்பாக்கம் குற்றப்பிரிவுக்கும், திரு.வி.க.நகர் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராக இருந்த பிரேம்குமார் கோயம்பேடு குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
யானைக்கவுனி குற்றப்பிரிவு ஆய்வாளர் அழகம்மாள் உயர்நீதிமன்ற அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், தலைமைச் செயலக காலனி குற்றப்பிரிவு ஆய்வாளர் பச்சமுத்து டி.பி.சத்திரம் சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கும், டி.பி.சத்திரம் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் பென்சாம் வேளச்சேரி குற்றப்பிரிவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
அடையாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் இருந்த வர்கீஸ் இக்னாட்டஸ் ராஜா அயனாவரம் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராகவும், அயனாவரம் ஆய்வாளர் ராஜகோபாலன் அடையாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், சிந்தாதிரிப்பேட்டை சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் வீரமணி பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவிற்கும், மோகன்ராஜ் சிந்தாதிரிப்பேட்டை சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
அண்ணா சதுக்கம் ஆய்வாளர் முருகேஸ்வரி பெரியமேடு குற்றப்பிரிவிற்கும், கருணாகரன் கோடம்பாக்கம் சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கும், ராமசுந்தரம் நுங்கம்பாக்கம் சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
கோடம்பாக்கம் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் சுகுணா கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவிற்கும், பாலசுப்பிரமணியம் நீலாங்கரை குற்றப்பிரிவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
டி.பி.சத்திரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் முத்து கிருஷ்ணராஜா மற்றும் நீலாங்கரை குற்றப்பிரிவு ஆய்வாளர் விசுவநாதன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த பணியிட மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ