Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜூலை (ஹி.ச.)
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் திருச்சி மாநகர் மற்றும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து நடைபெற்ற இந்தக் கூட்டம் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய சில நிர்வாகிகள்,
திருச்சி மாவட்டத்தில் புதிய மாவட்டச் செயலாளர்களை தேர்தலுக்கு முன்பே நியமித்திருந்தால், பல சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக சிறந்த முடிவுகளைப் பெற்றிருக்கலாம் அல்லது குறைந்தபட்சம் டெபாசிட் பெற்றிருக்கலாம் என்றும், தற்போதைய நிர்வாக அமைப்பு குறித்து சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி,
கட்சிக்கு விசுவாசமாக இல்லாமல் துரோகம் செய்து சென்றவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் பேச வேண்டாம்.
அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு வெற்றியைத் தேடித்தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும்,அதிமுக புதிய எழுச்சியுடனும் புத்துணர்வுடனும் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரும். நிர்வாகிகள் மனச்சோர்வு அடையாமல் கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam