Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 08 ஜூலை (ஹி.ச.)
திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த முகேஷ் (18), திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
மேலும், இவர் பகுதி நேர ஊழியராக திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஏ.ஆர். ஆர்கேட் வளாகத்தின் 2-வது மாடியில் செயல்பட்டு வரும் ‘Turnz India Corporate Network Pvt. Ltd.’ நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நிறுவனம் அமைந்துள்ள 2வது மாடியின் வெளிப்புறம் நின்று அவர் நேற்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, இவர் மீது அருகில் இருந்த மின்வாரிய உயர் அழுத்த (HT) மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த முகேஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கண்டோன்மென்ட் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.மின்சார வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் செல்லும் உயர் அழுத்த மின் கம்பங்களால் ஏற்படும் ஆபத்து குறித்து பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b