அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 64% இடங்கள் நிரம்பின - 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கை
சென்னை, 08 ஜூலை (ஹி.ச.) தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026–27 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்த இடங்களில் 64 சதவீதம் நிரம்பியுள்ளதாக கல்லூரி கல்வி இயக்கக அதிக
Council


சென்னை, 08 ஜூலை (ஹி.ச.)

தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026–27 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுவரை மொத்த இடங்களில் 64 சதவீதம் நிரம்பியுள்ளதாக கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள மொத்த 1,26,959 இடங்களில் இதுவரை 81,139 இடங்கள் நிரம்பியுள்ளன.

இதில் 32,320 மாணவர்கள், 48,797 மாணவிகள் மற்றும் 22 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.

இதனிடையே, அரசு கலைக் கல்லூரிகளில் முதுகலைப் படிப்புகளுக்காக 110 கல்லூரிகளில் மொத்தம் 24,334 இடங்கள் உள்ளன.

இந்தப் படிப்புகளுக்கு இதுவரை 16,009 பேர் பதிவு செய்துள்ள நிலையில், 10,029 பேர் சேர்க்கைக் கட்டணத்தை செலுத்தியுள்ளனர்.

மேலும், பி.எட். படிப்புகளுக்காக 21 அரசு கல்லூரிகளில் 2,040 இடங்கள் உள்ளன.

இதற்கு 4,140 பேர் பதிவு செய்துள்ள நிலையில், 1,702 பேர் சேர்க்கைக் கட்டணத்தை செலுத்தியுள்ளதாக கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ