இந்திய முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி -ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்
தமிழ்நாடு, 08 ஜூலை (ஹி.ச.) சௌரவ் கங்குலி (Sourav Ganguly) இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் உலக அளவில் மதிக்கப்படும் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் ஆவார். ரசிகர்களால் அன்போடு தாதா (வங்காள மொழியில் அண்ணன்) என்றும்,
V


தமிழ்நாடு, 08 ஜூலை (ஹி.ச.)

சௌரவ் கங்குலி (Sourav Ganguly) இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் உலக அளவில் மதிக்கப்படும் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் ஆவார்.

ரசிகர்களால் அன்போடு தாதா (வங்காள மொழியில் அண்ணன்) என்றும், கொல்கத்தாவின் இளவரசன், வங்காளப் புலி என்றும் அழைக்கப்படுகிறார்.

1990-களின் பிற்பகுதியிலும் 2000-களின் தொடக்கத்திலும் இந்திய அணியை ஒரு புதிய ஆக்ரோஷமான மற்றும் அச்சமற்ற பாதையில் வழிநடத்திய பெருமை இவரைச் சேரும்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் சந்திதாஸ் கங்குலி 1972ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார்.

ஒருநாள் போட்டிகள்:

311 போட்டிகளில் விளையாடி 22 சதங்கள் மற்றும் 72 அரைசதங்களுடன் 11,363 ரன்கள் குவித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்த உலகின் மூன்றாவது வீரர் ஆவார்.

இவர் வலது புறங்களில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர். அதனால் இவர் காட் ஆஃப் தெ ஆஃப் சைட்

(God of the Off Side) என அழைக்கப்படுகிறார்.

இவர் 2000ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்தார்.

ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஓட்டங்களை எடுத்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகள்:

113 போட்டிகளில் பங்கேற்று 16 சதங்கள், 35 அரைசதங்களுடன் 7,212 ரன்கள் எடுத்துள்ளார் (அதிகபட்ச ரன்கள்: 239).

2004ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

தொடர் சாதனைகள்:

டொரான்டோ ஒருநாள் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 4 போட்டிகளில் ஆட்ட நாயகன் (Player of the Match) விருது வென்று உலக சாதனை படைத்துள்ளார்.

உலகக் கோப்பை சாதனை:

உலகக் கோப்பை வரலாற்றில் ஓர் இன்னிங்ஸில் இந்திய வீரரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் சாதனையை (183 ரன்கள் - 1999 இல் இலங்கைக்கெதிராக) இவர் வைத்துள்ளார்.

வெற்றிகரமான கேப்டன்சி:

இந்திய அணியை 146 ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தி 76 போட்டிகளில் வெற்றியைப் தேடித்தந்துள்ளார்.

இவரது தலைமையில் இந்திய அணி 2002 ICC சாம்பியன்ஸ் டிராபியை வென்றது மற்றும் 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி எப்படி வெல்ல வேண்டும் என்ற உத்தியைக் கற்றுக்கொடுத்து, வீரேந்தர் சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான் மற்றும் எம்.எஸ். தோனி போன்ற எதிர்கால ஜாம்பவான்களை வளர்த்தெடுத்தார்.

நிர்வாகப் பதவிகள்சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2008 இல் ஓய்வு பெற்ற கங்குலி, பின்னர் கிரிக்கெட் நிர்வாகத்தில் இறங்கினார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராக (2019-2022) பணியாற்றினார்.

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் (CAB) தலைவராகவும், ஐபிஎல் (IPL) தொடர்களில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முக்கியப் பொறுப்புகளிலும் செயல்பட்டு வருகிறார்.

விருதுகள் மற்றும் சுயசரிதை:

இந்திய அரசு இவருக்கு 2004 ஆம் ஆண்டு நாட்டின் நான்காவது உயரிய சிவிலியன் விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது.

இவரது கிரிக்கெட் மற்றும் வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கும் A Century is not Enough (ஒரு சதம் போதாது) என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார்.

Hindusthan Samachar / Durai.J