Enter your Email Address to subscribe to our newsletters

ஸ்ரீநகர் , 08 ஜூலை (ஹி.ச.)
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இமயமலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அமர்நாத் குகைக்கோவிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்கான இந்த ஆண்டின் அமர்நாத் யாத்திரை கடந்த 3-ந்தேதி தொடங்கியது.
அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில், ஸ்ரீநகரில் இருந்து சுமார் 141 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோவில் கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 888 மீட்டர் உயரத்தில் உள்ளது.
இங்கு இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை 57 நாட்கள் நடைபெறுகிறது.
இதற்காக நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வருகின்றனர்.
யாத்திரை தொடங்கி 5 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இதுவரை 1 லட்சத்து 13 ஆயிரத்து 814 பேர் அமர்நாத் குகைக்கோவில் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற அமர்நாத் யாத்திரையில் 3 லட்சத்து 77 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று பனிலிங்கத்தை தரிசனம் செய்தனர்.
இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து, 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் யாத்திரையில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA