கரூரில் முதல்வர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி- ஏற்பாடுகள் தீவிரம்
கரூர், 08 ஜூலை (ஹி.ச.) தமிழக முதல்வரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய், ஜூலை 10-ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ள நிலையில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக கரூர் வெண்ணமலை அருகே, கரூர்–சேலம்
கரூர்


கரூர், 08 ஜூலை (ஹி.ச.)

தமிழக முதல்வரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய், ஜூலை 10-ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ள நிலையில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்காக கரூர் வெண்ணமலை அருகே, கரூர்–சேலம் பைபாஸ் சாலையில் உள்ள அட்ரஸ் கலையரங்கம் மைதானத்தில், சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் 5,000 பொதுமக்கள் அமரும் வகையில் பிரம்மாண்ட தற்காலிக கூடாரம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கூடாரம் அமைப்பதுடன், பாதுகாப்பு தடுப்புகள், ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பயணத்தின் போது, கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் 41 குடும்பங்களை முதல்வர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வாரிசுதாரர்களில் சிலருக்கு அரசு வேலைவாய்ப்பு ஆணைகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையொட்டி, அரசு நிகழ்ச்சி நடைபெற உள்ள கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Hindusthan Samachar / VINOTH KUMAR P